×

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து உச்சநீதிமன்றம் கவலை

டெல்லி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நாகரத்னா, பாக்சி அமர்வு கவலை தெரிவித்துள்ளது. ஏ.ஐ. மூலம் போலியான வழக்கு தீர்ப்பு, நீதிபதியின் கருத்துகளை பயன்படுத்தி மனுக்கள் தயாரிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது. ‘அண்மையில் மெர்சி வழக்கு என்று ஒரு வழக்கை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மெர்சி என்ற ஒரு வழக்கே கிடையாது, ஆனால் ஏ.ஐ. பயன்படுத்தி அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சில வழக்கு உண்மையாக உள்ளது; ஆனால் நீதிபதிகளின் கருத்து போலியாக ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக உள்ளது’ என நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,Suryakant ,Justices Nagaratna ,Bhaksi Sessions ,
× RELATED தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்க்க...