சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தகுதிச் சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் 10 மடங்கு உயர்த்தியதை கண்டித்து போராட்டம்; லாரி தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாட்டிலும் நிறுத்தி வைக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.
