×

கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய கல்லூரி உருவாக்கம்; 18,760 மாணவர்கள் பயன்

உயர்கல்வியில் சமூகநீதியைப் பேணும் பொருட்டு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், தொழிற்கல்வி பயில 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 54,301 மாணவர்களின் கல்வி மற்றும் உணவுக் கட்டணங்களை அரசே ஏற்று, இதுவரை ரூ.1,512 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10,563 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள் காரணமாக நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கை சராசரியை விட ஏறத்தாழ இருமடங்காக 47 சதவீதம் பெற்று தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

Tags :
× RELATED மாவட்டம் தோறும் நூலகங்களை மேம்படுத்த அரசு முனைப்பு