×

சேலம் – கோவை – நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையம்

கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.909 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவாக மாறிவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, அதி நவீன உற்பத்தித் திறன் முதலான 8 புதிய பாட பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : SALEM ,KOWAI ,NELLA GOVERNMENT ENGINEERING COLLEGES COMPETENCE CENTRE ,College ,Arts ,Technical Colleges ,
× RELATED மாவட்டம் தோறும் நூலகங்களை மேம்படுத்த அரசு முனைப்பு