×

அரசு மருத்துவமனையில் பிரசவங்களின் விகிதம்: தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செல்படுகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் மகப்பேறு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும், தேசிய சராசரியைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை களைய, ‘ஊட்டச்சத்து உறுதிசெய்’ எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய, பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.

Tags : Tamil Nadu ,Tamil Nadu government ,
× RELATED மாவட்டம் தோறும் நூலகங்களை மேம்படுத்த அரசு முனைப்பு