சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.542 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . வகுப்பறை, ஆய்வகங்கள், பணிமனை கட்டடங்கள், மகளிர் விடுதிக் கட்டடம், திறன்மிகு மையங்கள் திறந்து வைத்தார். 555.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பல்நோக்கு அரங்குகள், விடுதிகள் மற்றும் இதர கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
