- ஸ்ரீவில்லிபுத்தூர்
- விருதுநகர்
- பாலமுருகன்
- நீதிபதி
- சுதாகர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
- விருதுநகர் மாவட்டம்
- செங்குலம்
- குடும்ப நல நீதிமன்றம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி சுதாகரை நோக்கி அரிவாளை வீசிய பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பாலமுருகனு்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியுள்ளார். நீதிமன்றத்திற்குள் நீதிபதி மீது அரிவாள் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்திருக்கிறார். தனது x பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால், செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மேற்கொண்ட இந்தக் கொடூரத் தாக்குதல், சட்டத்தையும் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
நீதிமன்றம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் புனித இடமாகும். அங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தீர்ப்பில் கருத்து வேறுபாடு இருந்தால், சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு வழிமுறைகள் உள்ளன. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நீதிமன்றங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வலியுறுத்துகிறேன்” என கூறினார்.
