×

திட்டக்குடி அருகே இன்று காலை டிப்பர் லாரி மீது கார் பயங்கர மோதல்; சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி: மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை; போலீசார் விசாரணை

 

திட்டக்குடி: திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்த எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இன்று காலை 8 மணியளவில் ஜல்லி ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி சென்றது. அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

காரில் பயணம் செய்த 4 பேரில் 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். தகவலறிந்து ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார். மற்றொருவருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் காரில் பயணம் செய்தவர்கள் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பிரசாந்த் (30), நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐவின் ஐர்லாந் மகன் ஐசக் (32), கர்ணன் (33), கிரி (25) என தெரியவந்தது. இவர்களில் பிரசாந்த், ஐசக், கர்ணன் உயிரிழந்தனர். கிரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Thittakudi ,Ramanathapuram ,Cuddalore district ,Echtur National… ,
× RELATED மடப்புரம் கோயில் காவலாளி அஜித் கொலை...