×

விசிலை ஊதாமல் ரசிகர்களுக்கு சங்கு ஊதும் விஜய்: தமிமுன் அன்சாரி காட்டம்

மதுரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மதுரை மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இதில் பங்கேற்ற கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, நிருபர்களிடம் கூறியதாவது:
மகளிர் உரிமைத்தொகை மொத்தமாக ரூ.5 ஆயிரத்தை திமுக அரசு கொடுத்தது அரசியல் களத்தையே திருப்பி போட்டுள்ளது. இதனை ஜீரணிக்க முடியாத எதிர்க்கட்சிகள் காழ்ப்புணர்ச்சியோடு குற்றம் சாட்டுகின்றன. விஜய் ஒரு கற்பனை உலகத்தில் உள்ளார். தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் மத்தியில் விசிலை ஊதினால் பரவாயில்லை. அவரோ சங்கு ஊதுகிறார். விஜய் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். முதலில் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரை பதில் அளிக்கச் சொல்லுங்கள்.

திரிஷா குறித்த நயினார் நாகேந்திரனின் விமர்சனம் தரம் தாழ்ந்தது. இதை அனுமதிக்க முடியாது. கருத்தை, நாகரிகமான கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்களை, தரம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலம் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை, சமூக நீதி, சமூக நல்லிணக்கம் இதையெல்லாம் பாதுகாப்பதற்காக திமுக அரசு நீடிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் விரும்புகின்றோம். திமுக அரசை ஆட்சியில் அமர்த்தி தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்கின்ற ஒரே பார்வை மட்டும்தான் காங்கிரஸ் கட்சிக்கு இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : SANGU PUTHUM ,TAMIMUN ANSARI KATAM ,Madurai Zonal ,Election ,Humanitaya Democratic Party ,Madura ,Tamimun Ansari ,Dimuka government ,
× RELATED பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்