கோவை, பிப். 14: தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சினர் தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். கட்சி தலைவர்களும் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கான விருப்ப மனுவை அந்தந்த கட்சி அலுவலகங்களில் மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் வாங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை நீலாம்பூரில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கோவை மண்டல தேர்தல் ஆலோசனை கூட்டம், மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் அக்கட்சியின் தலைவரும், எம்பியுமான ஜிகே வாசன் கலந்து கொள்ள உள்ளார்.
