×

திருச்சியில் கார் மோதல் விவகாரம் இரு தரப்பு தகராறில் 3 பேர் கைது

திருச்சி, பிப்.14: திருச்சியில் கார் மோதல் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (30), இவரது பக்கத்து வீட்டுக்காரர் செபாஸ்டின் (24). இவர் பிப்.8ம் தேதி இரவு தனது காரை ஓட்டிச் சென்ற போது, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதியதில் இருவீட்டார் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மராஜ் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து, செபாஸ்டின், சார்லஸ் (23), கணேசன் (22)ஆகியோரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன்(20)அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதேபோன்று செபாஸ்டின் அளித்த புகாரின் பேரில் தர்மராஜ், பொன்னுசாமி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

 

Tags : 3 ,Trichy ,Dharmaraj ,Puthur Kollankulam ,Edamalaipatti, Trichy ,Sebastian ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை