×

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

 

திருச்சி பிப்.10:பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட குழு சார்பில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பாட்டிலுக்கு 10 ரூபாய் அளிக்கும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று 3 மணி நேரம் பணி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 158 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தது.

Tags : Tasmac ,Tsurichi ,P10 ,Tasmak ,Tamil Nadu ,Trichy District Committee ,
× RELATED பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா