கரூர், பிப். 14: கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் பகுதியில் உள்ள விளையாட்டு பூங்கா வளாகத்தை சீரமைக்வேண்டுமென மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த பகுதியினர் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு பூங்கா வளாகம் அமைத்து தரப்பட்டது.
இதே போன்ற பூங்கா வளாகம் பெரியாண்டாங்கோயில் பகுதியிலும் அமைத்து தரப்பட்டது. பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களில் போதிய பராமரிப்பில்லாததால் பழுதடைந்துவிட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
