- ஐரோப்பிய ஒன்றிய
- கரூர்
- ஒன்றிய மாநிலம்
- கரூர் எல்ஜி
- தலைவர் சிவராமகிருஷ்ணன்
- இந்திய ஒன்றியம்
- துணை ஜனாதிபதி
- ஜீவானந்தம்
கரூர், பிப். 13: ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் எல்ஜசி கிளை 1 அலுவலகம் முன்பு நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்ஐசி கிளை 2ன் தலைவர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். இந்திய தொழிற்சங்க துணைத்தலைவர் ஜீவானந்தம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
காப்பீட்டு கழக துணைத்தலைவர் கணேசன், மாவட்ட வங்கி ஊழியர் சங்க நிர்வாகி செல்வராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை சீரழிக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இநத அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
