×

அரவக்குறிச்சியில் குரங்குகள் அட்டகாசம்

 

அரவக்குறிச்சி, பிப்.11: அரவக்குறிச்சியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நகரப் பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தி வருகிறது.நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதுடன், சுற்றுவட்டாரங்களில் வளர்க்கப்படும் வாழை, தென்னை மரங்களில் ஏறி வாழைக்காய், தேங்காய் உள்ளிட்டவற்றை பறித்து சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயிகளுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித் திரியும் குரங்குகள் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை திடீரென தாக்க முயல்வதும், கடிக்க பாய்வதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்ப அச்சம் கொள்கின்றனர்.

Tags : Aravakurichi ,Karur district ,
× RELATED கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் கைது