×

காதுகளை காயமாக்கும் ஹாரன் சப்தம்

கருர், பிப். 14: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட நகரின் மையப்பகுதியில் தற்போதுள்ள பேரூந்து நிலையத்தை ஒட்டி மினிபேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேரூந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளூககு சென்று வருகிறது. மினி பேருந்து நிலையம் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் கொண்ட பகுதியில் உள்ளது.

இந்நிலையில், ஒரு சில மினி பேருந்துகள் அதிகளவு ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி மற்றவர்களை தொந்தரவுக்கு ஆளாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதிக ஒலி எழுப்புவதன் காரணமாக பொதுமக்களும், பயணிகளும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பகுதிகளை பார்வையிட்டு அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Tags : Karur ,Karur Corporation ,
× RELATED கரூர் அருகே விளையாட்டுப் பூங்கா சீரமைக்கப்படுமா?