×

கிருஷ்ணராயபுரம் அருகே மின்னணு மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம், பிப். 14: பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு முறை குறித்து மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நடைபெற்றது. கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எளிதில் வாக்களிப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் மகாதானபுரம் தெற்கு கிராமம் விஏஓ சஞ்சீவி, கிராம உதவியாளர் வடிவேல் உடன் இருந்தனர்.

 

 

Tags : Krishnarayapuram ,Old Jayankondam ,Old Jayankondam Cholapuram Panchayat ,Karur ,
× RELATED கரூர் அருகே விளையாட்டுப் பூங்கா சீரமைக்கப்படுமா?