- உடுமலை
- உடுமலை வங்கி
- பரோடா வங்கி
- உடுமலை தாலுகா வங்கி ஊழியர் சங்கம்
- யூனியன் அரசு
- காஷி
- சக்திவேல்
- விக்ரம்
உடுமலை, பிப்.13: ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்ட தொகுப்பை எதிர்த்து உடுமலை தாலுகா வங்கி ஊழியர் சங்கம் சார்பாக உடுமலை பேங்க் ஆப் பரோடா வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காசி தலைமை வகித்தார். சக்திவேல், விக்ரம் முன்னிலை வகித்தனர்.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவை சார்ந்த 50க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கு பெற்று 4 தொழிலாளர் சட்ட தொகுப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். இதேபோல தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
