×

வீட்டில் நகை திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை உறுதி

திருப்பூர், பிப்.5: திருப்பூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். கடந்த 19-5-2024 அன்று இவரது வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த அதே பகுதியை சேர்ந்த சட்டநாதன் (33), பீரோவில் இருந்த 3 பவுன் வளையல், 8 சேலைகள், 1 கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடினார்.

இதுதொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சட்டநாதனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டநாதன், திருப்பூர் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சட்டநாதனுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.

 

 

Tags : Tiruppur ,Satish Kumar ,Kurinji Nagar, Tiruppur ,Banyan Company ,
× RELATED காங்கயத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு