×

தாராபுரத்தில் 364 மாணவர்களுக்கு மடிக்கணினி

 

தாராபுரம், பிப்.11: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் புஷ்ப லதா தலைமை வகித்தார். கல்லூரி கல்வி மேம்பாட்டுதுறை தலைவர் அரிமா கோபாலகிருஷ்ணன், முன்னிலை வகித்தார்.

இதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு 2ம் ஆண்டு பயிலும் 177 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார். இதனை தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 187 மாணவ மாணவிகளுக்கும் என்ன மொத்தம் 364 விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட வழக்கறிஞர் செல்வராஜ், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tarapuram ,in Your Hands ,Tarapuram Government Arts and Science College ,RTO ,Felix ,Raja ,College ,Principal ,Pushpa Latha ,
× RELATED வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்