×

குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு

பல்லடம், பிப்.13: பல்லடம் அருகேயுள்ள பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையம் அண்ணமார் கோயில் வீதியில் உள்ள குடியிருப்பில் ஒரு வீட்டின் முற்றத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. அது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த நிலைய அதிகாரி முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் அப்பகுதியில் ஊர்ந்து சென்ற 3 அடி நீள பாம்பை பிடித்து அதனை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

 

Tags : Palladam ,Annamar Koil Road ,Poomalur Panchayat Naduvelampalayam ,Palladam fire station ,
× RELATED வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்