- துணை பதிவாளர் அலுவலகம்
- பொங்கலூர்
- பல்லடம்
- பல்லடம் துணைப் பதிவாளர் அலுவலகம்
- வே.கள்ளிபாளையம்
- கெத்தனூர்
பல்லடம், பிப். 13: பல்லடம் சார்பதிவாளர் அலுவலக எல்லை பகுதியில் இருந்து 11 கிராமங்களை தனியாக பிரித்து பொங்கலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்லடம் சார்பதிவாளர் அலுவலக எல்லை பகுதியில் இருந்த பொங்கலூர், வே.கள்ளிப்பாளையம், கேத்தனூர், வே.வடமலைப்பாளையம், வாவிபாளையம், எலவந்தி, மாதப்பூர், காட்டூர், கணபதிபாளையம், சித்தம்பலம், கரைப்புதூர் ஆகிய 11 கிராமங்களை பிரித்து புதிதாக அமையவுள்ள பொங்கலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கலூரில் புதிய அலுவலகம் ஓரிரு நாட்களில் துவங்கப்படவுள்ளது. இதர மற்ற 28 கிராமங்கள் வழக்கமான பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெறவுள்ளது.
