- குமரு
- நாகப்பட்டினம்
- மாவட்டம்
- பொதுச்செயலர்
- OSManiyan
- வேதாரண்யம் தொகுதி
- சட்டமன்ற உறுப்பினர்
- ஓ. எஸ். மணியன்
நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் ஓ.எஸ்.மணியன். முன்னாள் அமைச்சர். வேதாரண்யம் தொகுதி சிட்டிங் எம்எல்ஏ. இவருக்கு நேற்று முன்தினம் 72வது பிறந்த நாள். எப்போதும் ஓ.எஸ்.மணியன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட மாட்டாராம். தேர்தல் வருவதால் நேற்றுமுன்தினம் தடபுடலாக கொண்டாடி உள்ளார். ஓரடியம்புலத்தில் உள்ள வீட்டில் 25 கிலோ எடையில் கேக் வெட்டப்பட்டது. அதேபோல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் நகரில் ஊர்வலமாக சென்று, பொது மக்களுக்கு ஓ.எஸ்.மணியன் லட்டு வழங்கினார்.
விழுப்புரத்தில் நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘பிப்ரவரி 24 ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது. தேர்தல் நேரம் என்பதால் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது வீட்டு வாசலில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்த வேண்டும். அப்போது எம்ஜிஆரின் பாட்டையும் போட வேண்டும்’ என்று கட்சியினருக்கு அறிவுரையை முடித்தார். பாஜவின் ஊதுகுழலாக சமீப காலமாக செயல்பட்டு வந்த சி.வி.சண்முகம், அதிமுக மீது திடீர் பாசம் காட்டியதை இலை கட்சியினரே நகைத்தபடி கேட்டு நகர்ந்தனர்.
