- பொன்னர் கடுகடு
- முன்னாள்
- மத்திய அமைச்சர்
- Pon.Radhakrishnan
- மதுரை
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- பா.ம.க.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்யவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய கட்சிகள் இணையவும் வாய்ப்புள்ளது. பாமகவின் உட்கட்சி பூசல் குறித்த பிரச்னைக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக, அன்புமணி ராமதாஸ் உள்ளார். வெற்றிக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்’’ என்றார். ‘‘அதிமுக தலைமையிலான ஆட்சியில் பங்கு கேட்பீர்களா’’ என்று செய்தியாளர்கள் ேகட்டதற்கு, ‘‘எல்லா விஷயங்களையும், இப்போதே போட்டு உடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இன்னும் நாட்கள் உள்ளன. வேட்பாளர்களை முடிவு செய்து, தேர்தல் நடந்து, அதில் கிடைக்கும் வெற்றியின் அடிப்படையில், இறுதியாகவே நீங்கள் கேட்கும் விஷயம் வரும்’’ என்றார்.
