×

மோடியிடம் தமாகாவை அடகு வைத்த வாசன்; கட்சியை கூறுபோட்டு விற்கும் பிரேமலதா: நாஞ்சில் சம்பத் தாக்கு

நெல்லை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
இஸ்லாமிய மக்களுக்கு பாஜ அரசு பல இன்னல்களை இழைத்துள்ளதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான். கொள்கைக்காக மூப்பனார் துவக்கிய தமாகாவை ஜிகே வாசன் மோடியிடம் அடகு வைத்துவிட்டார். விஜயகாந்த் துவக்கிய தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா கூறுபோட்டு விற்பனை செய்யத் தயாராகிவிட்டார். ஆனால் பாவம் வாங்கத்தான் ஆளில்லை. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும்படியாக மாட்டிறைச்சி உண்ணக்கூடாது, மாட்டு இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என பாஜ அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தது. மேலும் முஸ்லிம் மக்களை பாதிக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தையும் கொண்டு வந்தது.

இத்தகைய செயல்களை செய்த பாஜவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். மாட்டிறைச்சியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதே பாஜவினர்தான். நான் என்ன சாப்பிட வேண்டும். எந்த உடை அணிய வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன். டில்லியில் இருந்து கொண்டு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழ் தேசியம் என பேசும் சீமான் எல்லோரையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vasan ,Tamaka ,Modi ,Premalatha ,Sampath ,Nanjil ,Nella ,Tamil Nelaka Victory Corporation ,Nelala Alappalayam ,Policy ,Development ,Nanjil Sampath ,Bahia government ,
× RELATED சொல்லிட்டாங்க…