×

பைனான்சியரை கத்தியை காட்டி மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு

 

திருச்சி, பிப்.11:திருச்சியில் பைனான்சியரை மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சி உறையூர் லிங்கநகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (42). இவரிடம் சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த விக்டர் (49) என்பவர் அடிக்கடி கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், ஜன.29ம் தேதி விக்டர் தனது நண்பரின் திருமணத்திற்காக ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் கார்த்திக் ரூ.5,000 தருவதாக கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிந்தாமணி அண்ணா சிலை அருகே கார்த்திக்கிடம் கத்தியை காட்டி விக்டர் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கார்த்தி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் விக்டர் (49) என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy ,Karthik ,Linganagar, Uraiyur, Trichy ,Victor ,Chinthamani Poosari Street ,Victor… ,
× RELATED பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா