×

இருதரப்பு மோதல் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

திருச்சி,பிப்.5: திருச்சி ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பிப்.3ம் தேதி இரவு இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலானது.

இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், கரணை கத்தியால் குத்தினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து கமலேஷ் (23) என்பவரை கைது செய்தனர். மற்றும் கரண், மணிகண்டன், பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : Trichy ,Karan ,Thiruvalarcholai Keezhattheru ,Srirangam, Trichy ,Prabhakaran ,
× RELATED தா.பேட்டையில் தனியார் பஸ் மோதி கூலி தொழிலாளி சாவு