திருச்சி,பிப்.10: லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், (இன்று) காலை காலை 11 மணி மாலை 5 மணி வரை பூவாளூர் கடை வீதி, மாதானம் வடக்குத்தெரு, நடுத்தெரு, பத்துக்கட்டுத்தெரு, புதுக்குடி, ராஜா தெரு, பெரியார் தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் பூவாளூர் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
