×

கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்

 

சிவகங்கை,பிப்.11:உறவினரை கம்பால் அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேவகோட்டை அருகே புக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(32). கூலித்தொழிலாளி. இவரது உறவினர் காரைக்குடி அருகே சிறுசாக்க வயலை சேர்ந்த குளித்தொழிலாளி ராஜு(26). கடந்த 3.5.2023 அன்று ராஜு புக்குடி கிராமத்திற்கு சென்றிருந்தார். அன்று இரவு குடிக்க மது வாங்கி தரும்படி ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ரவிச்சந்திரனை, ராஜு கம்பால் அடித்துள்ளார். இதில் ரவிச்சந்திரன் இறந்து போனார். இது குறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜுவை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகர்சாமி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அறிவொளி, குற்றம் சாட்டப்பட்ட ராஜுவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Shivaganga ,Sivaganga ,Ravichandran ,Bukudi village ,Devakota ,Raju ,Sirusaka field ,Karaikudi ,
× RELATED ஐயப்பன் கோயில்களில் மாதாந்திர சிறப்பு பூஜை