பழநி: பழநியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி பாஜக சார்பில் பழநியில் நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் குறைவானவர்களே கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமமுக, தென்னிந்திய பார்வர்டு பிளாக், பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், அதிமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது முதல்கொண்டே பழநி சட்டமன்ற தொகுதியை பாஜகவினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதை அதிமுகவினர் விரும்பாததால் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் தேஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாததால் டென்சனான அண்ணாமலை, தனது பேச்சின் இறுதியில் கூட்டணி கட்சிகளின் பெயர்களையும், அதன் நிர்வாகிகள் பெயரையும் கூறி நன்றி தெரிவித்தார். ஆனால், அதிமுகவின் பெயரை உச்சரிக்காமலேயே சென்று விட்டார்.
