×

வங்கதேசத்தில் மீண்டும் ஒரு இந்து நபர் வெட்டிக் கொலை

 

டாக்கா: வங்கதேசத்தில் அந்நாட்டில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிலர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மைமென்சிங்கில் உள்ள திரிஷால் உபாசிலா, போகர் பஜாரில் கடை நடத்தி வந்த 62 வயதான சுசென் சந்திர சர்க்கார் என்ற இந்து வணிகர் நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். சுசெனை கடைக்குள் வைத்து ஷட்டரை மூடிய அந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்று தப்பியது.

Tags : Bangladesh ,Dhaka ,Sushen Chandra Sarkar ,Bokar Bazaar ,Trishal Upazila ,Mymensingh ,
× RELATED மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள்,...