×

வகுப்பறைகளில் கவன சிதறல், இணையவழி மிரட்டல்; உலகளவில் 58% பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை: யுனெஸ்கோ அறிக்கை

 

புதுடெல்லி: உலகளவில் 58% பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடக பயன்பாட்டால் அதிகரிக்கும் உணவு கோளாறுகளால் ஆண்களை விட பெண்கள் இருமடங்கு பாதிக்கப்படுகின்றனர். 32 சதவீத டீன் ஏஜ் பெண்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்திய பிறகு தங்கள் உடல் பற்றிய மோசமான உணர்வுகளால் பாதிக்கப்படுகின்றனர். டிக்டாக் ஊடகத்தின் அல்காரிதம் போன்ற ஆபத்தான போக்குகள், ஒவ்வொரு 39 நொடிகளுக்கும், டீன் ஏஜ் பிரிவினரை உடல் பட உள்ளடக்கத்துடன் குறி வைக்கிறது.
எனவே, வகுப்பறைகளில் கவன சிதறல், இணையவழி மிரட்டல் மற்றும் சமூக ஊடக பாதிப்புகளை குறைக்க, உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள்(58% அல்லது 114 கல்வி அமைப்புகள்) பள்ளிகளில் செல்போன்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன.

இந்த தடை மாணவர்களின் கவனத்தை மேம்படுத்தி, கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.
கடந்த 2023ம் ஆண்டில் 24 சதவீதமாக இருந்த இந்த தடை, தற்போது உலகளவில் 58 சதவீத கல்வி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது மிக வேகமான மாற்றம். இந்த தடைகள் மூலம், பிரான்ஸ், பின்லாந்து, ஸ்பெயின், நார்வே மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் கற்றல் திறன் மேம்பட்டிருப்பதாகவும், சமூக ஊடகத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் மனநல பாதிப்புகள் குறைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் தேசிய அளவிலான கடுமையான தடைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும், உலகளாவிய விவாதங்கள் அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : UNESCO ,New Delhi ,
× RELATED மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள்,...