×

சேலம் வீராணத்தில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி

சேலம், பிப்.11: சேலம் அடுத்த வீராணம் தாதம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 8ம் தேதி காலை பெங்களூரில் இருந்து சேலம் வந்த அவர், வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அனைத்து பொருட்களும் அப்படியே இருந்தது. இதுகுறித்து வீராணம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் நேரில் வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர், திருடும் நோக்கில் கதவை உடைக்க முயன்றதும், முழுமையாக உடைத்து உள்ளே செல்ல முடியாததால் அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem Veeranam ,Salem ,Senthilkumar ,Thadampatti, Veeranam ,Bangalore ,
× RELATED சேலத்தில் மேளம் அடித்து டான்ஸ் ஆடிய...