×

போடிநாயக்கன்பட்டி ஏரியில் புல்தரைக்கு தீ வைத்த 3 நபர்கள் குறித்து

போலீசார் விசாரணைசேலம், பிப்.11: சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரி ரூ.19 கோடியில் புதுப்பொலிவு பெற்று வருகிறது. ஏரிகரையின் ஒரு பகுதியில் ரூ.30 லட்சத்தில் புல் தரை, செடிகள் மற்றும் இவைகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 3ம்தேதி ஏரிக்குள் நுழைந்த மர்மநபர்கள், புல் தரைகள், செடிகளுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த தீயில் புல் தரைகள், செடிகள் தீப்பற்றி எரிந்து கருகின. ரூ.30 லட்சம் மதிப்புள்ள புல்தரை முழுவதும் எரிந்துள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரரும், சூரமங்கலம் மண்டல மாநகராட்சி அதிகாரிகளும் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின்பேரில் போலீசார் ஏரியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை பார்த்து ஆய்வு செய்தனர். அதில், 3பேர் கொண்ட கும்பல், ஏரிக்குள் சென்று தீ வைத்து விட்டு சென்றது தெரிந்தது. இந்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘போடிநாயக்கன்பட்டி ஏரியில் புல்தரைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதனை மீண்டும் புதிதாக வைக்க ஒப்பந்ததாரரை அறிவுறுத்தியுள்ளோம். ஏரி பகுதியில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபட மனு அளித்துள்ளோம்,’’ என்றனர்.

Tags : Bodinayakkanpatti Lake ,Salem ,
× RELATED சேலம் வீராணத்தில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி