×

அப்துல்கலாம் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட வேண்டும்

சேலம், பிப்.10: அப்துல்கலாம் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை மனு அளித்துள்ளார். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நங்கவள்ளி அடுத்த சீரங்கனூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தேசிய கொடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கொடியை எடுத்து வந்து மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கடந்த 2015ம் ஆண்டில் இருந்து அப்துல்கலாம் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறோம். அப்துல்கலாம் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்க வேண்டும், தமிழக மீனவர்களின் பிரச்ைனக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதனை வலியுறுத்தி மனு அளித்துள்ளேன்,’’ என்றார்.

Tags : Abdulkalam ,Salem ,Rajkumar ,Seeranganur ,Nangawalli ,
× RELATED சேலம் வீராணத்தில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி