×

பீகார் வாலிபரிடம் போன், பணம் பறிப்பு

சேலம், பிப்.10: சேலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து, பீகார் வாலிபரிடம் செல்போன், பணம் பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அமான் தாகூர்(22). கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தேடி சேலத்திற்கு வந்தார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் நெத்திமேட்டில் ஒரு வேலை இருப்பதாகவும், அங்கு நேரில் வரும்படியும் அழைத்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் காலை நெத்திமேட்டிற்கு வந்த அமான் தாகூரிடம், குறிப்பிட்ட நிறுவன பணிக்கு செல்லும்படி அந்த நபர் தெரிவித்தார். ஆனால், அந்த வேலைக்கு செல்ல தனக்கு விருப்பமில்லை என அமான் தாகூர் தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென அந்த நபர், அமான் தாகூரின் செல்போன் மற்றும் ரூ.11 ஆயிரத்தை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bihar ,Salem ,Aman Thakur ,Patna, Bihar ,
× RELATED சேலம் வீராணத்தில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி