×

ம.பி. கோயிலில் கூட்ட நெரிசல் – பெண் பக்தர் பலி

 

போபால்: மத்தியப் பிரதேசம் நவகிரக கோயில் திறப்பு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்தார். நெரிசலில் சிக்கி 70 வயது மூதாட்டி உயிரிழப்பு; மற்றொரு பெண் சிறுமி உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் கலச யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரில் புதிதாக கட்டப்பட்ட கோயில் திறப்பு விழாவை ஒட்டி கலச யாத்திரை நடந்துள்ளது. யாத்திரையில் பங்கேற்ற பெண்களுக்கு புனித கலசம் வழங்கப்பட்டபோது அதனை பெற பலர் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : MP Temple ,Bhopal ,Navagraha ,Madhya Pradesh ,Madhya Pradesh… ,
× RELATED ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக...