இம்பால்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குல் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். குக்கி – மெய்த்தி பிரிவினர் இடையே நீடிக்கும் வன்முறை காரணமாக வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியுள்ளது. தற்போது நடந்த வன்முறையில் 9 முதல் 10 வீடுகள் வரை தீக்கிரையானதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
