×

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!!

சென்னை : ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், கொல்கத்தா ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்டம் – ஒழுங்கு நிலைமை சீராக பேணப்பட வேண்டும் என்பதற்காகவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் முக்கிய நகரங்கள், மாவட்டங்களில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 5 மாநில தலைமை செயலாளர்கள், 5 மாநில தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “அரசு அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தாலோ?, ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குமே பணியாற்றி வந்தாலோ அவர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும். உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்குமேல் பதவியில் உள்ளவர்களை சொந்த மாவட்டங்களில் நியமிக்கக்கூடாது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Election Commission ,Chennai ,Tamil Nadu ,Kerala ,Puducherry ,Assam ,Kolkata.… ,
× RELATED ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக...