- ஏவியன் காய்ச்சல் தொற்று
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- சுப்பிரமணியன்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
சென்னை: தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது; மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் “முன்னெச்சரிக்கையாக ஆஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது. இறைச்சிகளை நன்கு வேகவைத்த பிறகே சாப்பிட வேண்டும். காகம், கோழி போன்ற பறவைகள் உயிரிழந்தால் அவற்றை ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
