×

கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு வேலை மறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை;பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, தர்மபுரி மாவட்டம், கம்பயநல்லூர் பேரூராட்சியை சேர்ந்த 10 கொசு ஒழிப்புப் பெண் பணியாளர்களை, வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்தியுள்ளனர். இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 பெண் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Indian Communist Party ,Chennai ,Communist Party of India ,Gampayanallur Town Panchayat, Dharmapuri district ,
× RELATED சொல்லிட்டாங்க…