×

பாஜவில் இருந்து விலகி தவெகவில் போட்டியிட அதிமுக மாஜி மகன் முயற்சி: தங்கைக்கு எதிராக களம் காண்பாரா?

நாகர்கோவில் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான நாஞ்சில் முருகேசனுக்கு அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் இருந்தாலும், அவரது மகன் சிவராம் அவருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதா இருந்தபோதே, நாஞ்சில் முருகேசனுக்கு 2வது முறை நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியபோது, ஜெயலலிதா ஜெயிக்க முடியாது, அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது என மகன் சிவராம் பேசிய ஆடியோ வைரல் ஆனது.

இதனையடுத்து, நாஞ்சில் முருகேசன் தனது மகன் விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட பொறுப்பில் உள்ளதுடன், தனக்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவருடன் தனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என பதறிபோய் விளக்கம் அளித்தார். உளவு பிரிவு தகவலும் அதனை உறுதி செய்ததை அடுத்து நாஞ்சில் முருகேசனுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், தனது மகள் ஸ்ரீலிஜா நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து, பா.ஜ. விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணை தலைவராக பதவி வகித்த சிவராம் தனது மனைவி திவ்யாவை களம் இறக்கினார். அரைக்கோடிக்கு மேல் செலவும் செய்தார். எனினும் இதில் ஸ்ரீலிஜா வெற்றி பெற்றார். தற்போது எம்.எல்.ஏ பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலிஜா தீவிர களப்பணி ஆற்றி வந்தார்.

இதனையறிந்த சிவராம், எம்.எல்.ஏ தேர்தலில் ஸ்ரீலிஜாவிற்கு எதிராக தனது மனைவி திவ்யாவை களம் இறக்குவதாக கூறி வந்த நிலையில், மனைவி திவ்யா, மாமனார் நாஞ்சில் முருகேசன் மற்றும் மதினி ஸ்ரீலிஜாவுடன் சமாதானம் ஆகி குடும்பத்துடன் ஐக்கியமாகவிட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும் கண்டிப்பாக நாகர்கோவில் தொகுதியை பாஜவிடம் பெற்று தருவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ஏற்ப பா.ஜ. துணை அமைப்புகளும், நாஞ்சில் முருகேசனிடம் ஸ்ரீலிஜா நின்றால், வெற்றிக்கு உழைப்பதாக கூறியுள்ளனர். மேலும், பா.ஜவிலும் சீட் கேட்டு பலரும் போர்க்கொடி தூக்கி வருவதால், தொகுதி அதிமுகவிற்கு தாரை வார்க்கப்படலாம் என்ற பேச்சு பா.ஜ. வட்டாரத்திலும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பா.ஜ. விருந்தோம்பல் பிரிவில் பதவி வகித்தாலும், தனது சகோதரியை எதிர்த்து களம் காண தவெக சார்பில் போட்டியிட சீட் கேட்டு சிவராம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக தனது தந்தையின் நண்பராக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஜய் மன்றத்தில் பொறுப்பில் இருந்தபோது, தனக்கு நெருக்கமாக இருந்த ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மூலமாக சீட் பெற முயற்சி மேற்கொண்டுள்ளார்.

தவெகவில் வழக்கறிஞர் ஒருவர் உள்பட பலர் சீட் கேட்டு வரும் நிலையில், தங்கைக்கு எதிராக சொந்த அண்ணனே போட்டியிட சீட் கேட்டு இருப்பது பா.ஜ. மற்றும், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான பேசு பொருளாகி உள்ளது.  குமரியில் 6 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தும், போட்டியிட சிலர் தீவிர ஆர்வம் காட்டுவது, தவெகவில் உள்ள மூத்த உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Adimuga Maji ,Bajaj ,Tavega ,Tanga ,Nagarko ,Reverend ,M. L. ,Murukesan ,Evan Nanjil ,Shivaram ,Jayalalitha ,Nanjil Murukesan ,Nagargo ,
× RELATED அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி...