×

திமுக – காங். கூட்டணி எந்த பிசுபிசுப்பும் வராது: அமைச்சர் ரகுபதி உறுதி

 

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: தவெகவுக்கு 42சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகின்றனர். அதை திருப்பி 24 இருந்தாலே பெரிய விஷயம். செங்கோட்டையனுக்கு அரசியல் புள்ளி விவரம் தெரியாது.

அவருக்கு டூர் போட தான் தெரியுமே தவிர, மக்களின் மனதை அறிய தெரியாது. 42 சதவீதம் இல்லை, 24 சதவீதமும் கிடையாது, அதற்கும் குறைவுதான். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஒத்து போகாது என்பது எடப்பாடி பழனிசாமியின் கனவு, அவரது எதிர்பார்ப்பு, அதனால் அதை சொல்கிறார். எடப்பாடி எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவர் என்பது நாடறிந்த உண்மை.

காங்கிரஸ்- திமுக கூட்டணி குறித்து பேச குழு அமைக்க சரியான நேரம் எப்போது வருகிறதோ, அப்போது குழு அமைப்போம். இது மிகப்பெரிய கூட்டணி, சுருக்கமான காலத்தில் கூட்டணியை பேசி முடிக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் எங்கள் தலைவர் வியூகம் வகுத்து கூட்டணியை முடிவு செய்வார். அதில் எந்தவித பிசுபிசுப்பும் வராது, யாரும் கவலைப்பட வேண்டாம்.

எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி என்பது பொய் பாடி வாக்குறுதிகள். எல்லாமே பொய் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஆட்சியில் இருக்கும் போது இதையெல்லாம் செய்திருக்கலாம், செய்யவில்லை. நாங்கள் சொன்னதையும் செய்ய முடியாது என்ற சொன்ன வாய் தான் எடப்பாடி. அவரை மக்கள் நம்ப மாட்டார்கள். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் வராது. திராவிட மாடல் ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK ,Congress ,Minister ,Raghupathi ,Natural Resources ,Pudukkottai ,Thaveka ,Sengottaiyan ,
× RELATED ஒண்ணுக்கே வழியில்ல… விஜய்யை பொளந்து கட்டிய சண்முகம்