- கேரள உயர் நீதிமன்றம்
- பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்
- திருவனந்தபுரம்
- சபரிமலை
- சிறப்பு விசாரணை குழு
- அய்யப்பன் கோயில்
- துவாரா
- பாலகர்…
திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கத்தகடுகளை பாபா அணுஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி பரிசோதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கத் தகடுகளை பரிசோதனைக்கு அனுப்ப சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் உள்ள தூண்கள், துவார பாலகர் சிலையில் இருந்து தங்கத் தகடு திருடப்பட்டதாக புகார் எழுந்தது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. சபரிமலை தங்கத் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது; சபரிமலை கோயில் தங்கத்தகடுகளை பாபா அணுஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி பரிசோதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கத் தகடு திருட்டு வழக்கை விசாரிக்கும் எஸ்ஐடியின் கோரிக்கையை ஏற்று பாபா அணுஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்த தேசிய பரிசோதனை மையத்துக்கு தங்கத்தகடுகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தற்போது பொருத்தப்பட்டுள்ள தகடுகளில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதை கண்டறிவதற்காக பரிசோதனை செய்ய ஆணையிட்டுள்ளது. தங்கத் தகடுகளை பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிப். 19க்கு ஒத்திவைத்தனர்.
