×

வரி என்பது நன்கொடை அல்ல மக்களின் பங்களிப்பு; சமூக நீதிக்காக பாடுபடுவதாக சொல்பவர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை கண்டிப்பு

சென்னை: தொடர்ந்து வரி மோசடி செய்து வரும் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வாங்கியது முதல் புலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தை மறைத்தது வரை அவருக்கு பெரிய அளவில் மன ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 2012ல் பிரிட்டனில் தயாரான சொகுசு காரான ரோல்ஸ் ராய் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இதையடுத்து அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்துதனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் கட்ட உத்தரவிட்டிருந்தார். சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பாகும்.

இதில், கடமை தவறக்கூடாது என்று அறிவுறுத்தியது. கார் பிரியரான நடிகர் விஜய்யிடம் வின்டேஜ் மற்றும் பிஎம்டபுள்யூ கார்கள், மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை கார்கள் உள்ளன. இதில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் குறைந்தபட்ச விலை ரூ.5 கோடியும் அதிகபட்ச விலை ரூ.9.50 கோடி ஆகவும் உள்ளது.  மற்ற கார்களை போல அல்லாமல், ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிக்கவே குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

இதற்கு காரணம் இதன் பெரும்பாலான வேலைகள் மனித உழைப்பில் செய்யப்படுவது தான், மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரியர்களுக்கு ஏற்றாற்போலவே அவர்கள் விரும்பும் வண்ணம், காரின் உள்ளே வசதிகள் போன்றவை பிரத்யேக கவனத்துடன் செய்து கொடுக்கப்படும்.

இதில் நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை 2012ல் சுமார் 3.5 கோடி ரூபாய், இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்1 வகையை சார்ந்தது. லிட்டருக்கு ஐந்து முதல் எட்டு கிலோ மீட்டர் வரை அந்த கார் மைலேஜ் கொடுக்கக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் 250 கிலோ மீட்டர். தமிழ் திரைப்பட உலகில், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் விஜய், தனுஷ் ஆகியோர் இந்த ரோல்ஸ் ராய்ஸ் வகை கார்களை வைத்திருக்கிறார்கள்.

Tags : Chennai High Court ,Chennai ,Vijay Rolls-Royce ,UK ,
× RELATED மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்...