- கிருஷ்ணசாமி
- நெல்லா
- புதிய தமிழ்நாடு கம்பெனி
- ஜனாதிபதி
- டாக்டர்
- கிருஷ்ணசாமி நெல்லை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
நெல்லை: புதிய தமிழகம் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எங்களது கட்சியின் உயர்மட்டக் குழுவினர் கள அளவில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த அறிக்கை வரும் 11ம் தேதி சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 12 முதல் 14ம் தேதிக்குள் எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்துத் தெளிவான முடிவை எடுப்போம்.
கூட்டணி பேச்சுவார்த்தைக்காக புதிய தமிழகம் கட்சி கதவை திறந்து வைத்திருக்கிறது. நல்ல காற்று வந்தால் திறந்து வைப்போம். மோசமான காற்று என்றால் மூடிவிடுவோம். புதிய தமிழகம் கட்சி தனித்தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என்கிற பிம்பம் இம்முறை உடைக்க முயற்சிக்கிறோம். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நாங்கள் நெல்லை, நாங்குநேரி தொகுதிகளில் ஒன்றை கேட்டுப் பெற நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
