×

இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக இன்று உருவெடுத்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்: திருச்சி சிவா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி உரையற்றினார். 5 பேருடன் தொடங்கப்பட்ட இளைஞரணியில் தற்போது 5 லட்சம் நிர்வாகிகள் உள்ளனர். தமிழ்நாடு தேர்தலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது தி.மு.க இளைஞரணி. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை வகுப்புகள் நடத்தப்பட்டன. முரசொலி நாளிதழில் பாசறை பக்கம் உருவாக்கியவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இளைஞர்கள்தான் ஒரு இயக்கத்தின் படைக்கலன்கள்.

இன்றைய இளைஞர்களின் தனிப்பெரும் தலைவன் உதயநிதி ஸ்டாலின். எதிர்காலத்தில் இவரை நம்பி இயக்கம் இருக்கிறது. நமது இயக்கத்தை நம்பி நாடு இருக்கிறது. இளைஞர்களுக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுத்து, இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக இன்று உருவெடுத்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இளைஞரணி சார்பில் தொகுதிகள் தோறும் கலைஞர் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, இந்திதான் இந்தியாவை ஆள வேண்டும் என நினைக்கும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கிறது.

இவர்கள் எத்தனைப் பட்டாளத்துடன் வந்தாலும் தி.மு.க என்ற கோட்டை இருக்கும் வரை யாராலும் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பா.ஜ.க கெடுத்து வருகிறது. தி.மு.க என்னும் கோட்டை இருக்கும்வரை பா.ஜ.கவால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது. வெற்றி என்ற செய்தி வரும்வரை அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. மாநில உரிமைகளை திமுக பாதுகாத்து வருகிறது. திமுக என்ற இயக்கத்தால் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்கிறோம். 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்; 2026 தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Udhayanidhi Stalin ,Trichy Siva ,Virudhunagar ,DMK ,Deputy General Secretary ,Southern Regional League Youth Wing ,Virudhunagar district ,Tamil Nadu… ,
× RELATED திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு :...