×

‘வரும்… ஆனா வராது’ ஜனநாயகன் பட விவகாரத்தில் சுணங்கிப் போன தவெக

 

கோவை: கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினர் அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தினர் எந்த தேர்தல் வேலையும் செய்யாமல் ஒதுங்கி கிடக்கின்றனர். ஜனநாயகன் படம் வரும் என கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். படம் ரிலீசாகாத அதிருப்தியில் கட்சியினர் சுணங்கி போய் விட்டார்களாம். படம் வந்திருந்தால் விஜய் ரசிகர்கள் எழுச்சியுடன் வேலை செய்திருப்பார்கள்.

இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் ரொம்ப டல்லாக இருக்கிறார்களாம். மாநில தலைமையில் இருந்தும் மாவட்டத்திற்கு முறையான உத்தரவு எதுவும் வருவதில்லையாம். தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் பூத் கமிட்டி கூட்டம், மாவட்ட அளவிலான உயர் நிலை குழு கூட்டம், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், மண்டல அளவிலான கூட்டம் என எதுவும் நடத்தவில்லையாம். இப்புடி இருந்தா எப்புடி? என்று நிர்வாகிகள் சலித்துக் கொள்கிறார்களாம்.

Tags : democrat ,KOWAI ,DIMUKA ,ADIMUKA ,BAJA ,CONGRESS ,KOWAI DISTRICT ,Tamil Nadu Victory Club ,Democratic ,
× RELATED இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும்...