- தாய்…
- OPS
- சென்னை
- ஓ. பன்னீர்செல்வம்
- தாய்
- முன்னாள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- ஏர் இந்தியா
சென்னை: தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கு, தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கு அவசரம் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பகல் 12.15 மணியளவில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான், நான் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தேன். இந்தியாவில் உள்ள கோயில்களுக்கு, வெளிநாடுகளுக்கு செல்லவில்லை. தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. எனவே, இன்னும் அவகாசம் உள்ளது. அதேபோல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. எனவே, இப்போது அவசரம் இல்லை.
உங்களிடம் சொல்லிவிட்டு தான் செய்வேன். நிர்மலா சீதாராமன், தமிழ் மொழி குறித்து பேசியதை, நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன். நீங்கள் தனிக்கட்சி தொடங்குவீர்களா அல்லது திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, சிரித்துக் கொண்டே, எந்த ஓபிஎஸ்சை கேட்கிறீர்கள் என்று பதிலுக்கு கேட்டுவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்றார்.
