×

ஒடிசாவில் திடீர் விபத்து சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின

புவனேஷ்வர்: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜல்பைகுரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது. இந்த ரயில் நேற்று காலை ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம், ஜகாபுரா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, உயிரிழப்புகள் எதுவும் இல்லை. விபத்தில் ஒரு ஏசி பெட்டியும் 2 பொது பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு விலகின. இதனால் பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு பத்ரக்கில் இருந்து மீட்பு மற்றும் மீட்பு குழு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Tags : Odisha ,Chennai Express ,Bhubaneswar ,Chennai Central ,Jalpaiguri ,Jajapura ,Jajpur district ,
× RELATED நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு